Thursday, February 4, 2010

அசல் விமர்சனம்


அஜித்தை வைத்து காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த சரணின் அடுத்த படம் தான் அஜித்தின் 49 வது திரைப்படமான "அசல்". படத்திற்கு இணை இயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார் அஜித்.

"படத்தின் ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்புடன் கதை சொல்லி நம்மை சீட்டின் நுனியில் அமர வைக்கிறார் இயக்குனர்". இது மாதிரி நான் எப்பதான் எழுத போறேனோ தெரியல போங்க.

கதை

பிரான்சில், மிகப்பெரிய பணக்காரத் தந்தையான அஜித்திற்கு 3 மகன்கள்.முதல் மனைவியின் மகன்கள் சம்பத், ராஜீவ் கிருஷ்ணா. இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் இளைய அஜித். எந்த வேலையாக இருத்தலும் இளைய அஜித்திடம் கேட்ட பிறகே செய்கிறார் தந்தை அஜித். இதனால் மற்ற இருவருக்கும் இளைய அஜித்தை பிடிக்காமல் போகிறது.

இளைய அஜித்தை 10 வயது வரை வளர்த்து பின்னர் பிரான்சில் உள்ள தந்தை அஜீத்திடமே ஒப்படிக்கிறார் பிரபு.

தந்தை அஜித் தன் இறப்பிற்குப் பிறகு தனது சொத்து இளைய அஜித்துக்கு தான் சேர வேண்டும் என உயில் எழுதி விட்டு இறந்து விடுகிறார்.அதனால் இளைய அஜித்தை தீர்த்து விட்டு சொத்தை அபகரிக்க முயல்கின்றனர் மற்ற இருவரும்.

இதறகிடையில் மும்பை சேர்ந்த தாதா ஒருவன் ராஜுவை மும்பைக்கு கடத்தி சம்பத்தின் குடும்ப சொத்து முழுவதையும் தனக்கு கொடுக்குமாறு மிரட்டுகிறான். பின்னர் அஜித் பிரான்சில் இருந்து மும்பைக்கு வந்து அவரது தம்பி ராஜு கிருஷ்ணாவை காப்பாற்றுகிறார்.சகோதரர்கள் திருந்தி விட்டார்கள் என எண்ணிய நேரத்தில், அஜித்தை சுட்டு விட்டு பிரான்ஸ் பறகிறார்கள் சகோதர்கள் .

தப்பி பிழைத்த அஜித் தன்னை கொலை செய்ய என்ன காரணம் என கண்டுபிடிக்க பிரபு, பாவனா, யூகிசேது அவர்களுடன் பிரான்ஸ் போகிறார். பின்னர் தன் தம்பி இருவரையும் கொள்கிறார்.

சமிரா, பாவனா, பிரபு, சுரேஷ் , யூகிசேது

பிரான்சில் அஜித்திற்கு நண்பராக சமிரா. இந்தியாவில் அஜித் தங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார் பிரபு. அவர்க்கு உறவினராக பாவனா . காமடி பீசுக்கு யூகிசேது . பிரான்சில் போலிசாக வேலை செய்யும் சுரேஷ் சம்பத்திற்கு நண்பராக வருகிறார்.

பாடல்கள்

அசல் பாடல் வெளியுட்டு விழாவில் அஜித் , பிரபு பிடிக்கும் என சொன்ன "என தந்தை", "எங்கே எங்கே " இரண்டுமே படத்தில் மிஸ்ஸிங் ..."டொட்டடொய்ய்ய்ங்...". பாடல் மட்டும் ரசிக்கும் படி படமாக்கி உள்ளார்கள்.so மற்ற பாடல்கள்?

இரண்டு நாயகிகளும் அஜித் தனக்குத்தான் என் போட்டி போடுகிறார்கள். இதில் பாவனாவிற்கு சமீரா விட்டு கொடுக்கிறார். அது எப்படித்தான் முதல் பார்வையிலேயே பாவனாவிற்கு அஜித் மேல காதல் வருதோ.

பிரான்சில் வரும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாகவும் புதுமையாகவும் உள்ளன.

Result

அஜித் தயவு செய்து நல்ல கதையை தேர்தெடுத்து நடிங்க . இந்த கதைக்காகவா 6 மாசம் Wait பண்ணிங்க. ரமணா, வில்லன் படத்துக்கு திரைக்கதை பண்ணிய யூகி சேது இந்த படத்துல சொதபிட்டாறு .

படத்துல அஜித் நல்லா 'Ramb ஷோ' பண்ணி காட்றாரு . அதுக்காகவாவது இந்த படத்தை ஒரு தடவை பாருங்கன்னு நான் சொன்னா, நீங்க என்னை என்ன சொல்வீங்க?

படத்தில இருக்கிற ஒரே நல்ல விஷயம், படம் பில்லா மாதிரி ரொம்ப ஸ்டைலிஷா வந்திருக்கு. அதனால இந்த படத்தை "அசல்" அஜித் ரசிகர்கள் கொண்டாடலாம்..